நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக்கூடாது?
மருத்துவக் கல்லூரி தகுதித் தேர்வான நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 3081 மாணவர்களில் 48 பேர் மட்டுமே நீட் பயிற்சி மையத்தில் பயிலாதவர்கள். மேலும், நீட் பயிற்சி மையத்தில் இரண்டு முதல் ஐந்து லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது .இவ்வாறு பெரும் தொகை வசூலிக்கப்படுவதால் ஏழை மாணவர்களின் எட்டாக்கனியாக ஆகிவிட்ட நீட் ஏன் திரும்பப் பெறக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது
|