இத்தலம், "கலி தோஷம் இல்லாத தலம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இத்தலத்திலிருந்து சற்றுள்ள
மணிகைரவம் என்னும் கிணற்றில், செவ்வல்லி மலரில் அவதரித்தவர். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஐப்பசி சதயம்
நட்சத்திரத்தையொட்டி இவருக்கு 10 நாள் திருவிழா நடக்கிறது.தலத்தில் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரையும் ஒரே
இடத்தில் நிற்கச்செய்து அருளினார் திருமால். இதன் அடிப்படையில் இவ்விழாவில் மூன்று ஆழ்வார்களும் ஒன்றாக காட்சி தரும், "திருக்கோவிலுõர்
வைபவம்' நிகழ்ச்சியும், பத்தாம் நாளில் பிறந்த தலமான கிணற்றிற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருமழிசையாழ்வார், இத்தலத்தில்
பேயாழ்வாரிடம் சீடராக இருந்து ஞான உபதேசம் பெற்றார். இந்த வைபவம், ஐப்பசி திருவிழாவின் 4ம் நாளில் நடக்கிறது. லட்சுமி, அமுதம் கடைந்த
பாற்கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் இவளுக்கு, "அமிர்தவல்லி' எனப்பெயரிட்டு வளர்த்தார் பிருகு. அவள் திருமண வயதை அடைந்தபோது,
அவளை மணந்து கொள்ளும்படி திருமாலிடம் வேண்டினார். அவரும் இங்கு வந்து தாயாரை மணந்து கொண்டார். பிருகுவின் வேண்டுதலுக்காக
சுவாமியும், தாயாரும் இங்கு எழுந்தருளினர்.
இத்தலம், "கலி தோஷம் இல்லாத தலம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இத்தலத்திலிருந்து சற்றுள்ள மணிகைரவம் என்னும் கிணற்றில், செவ்வல்லி மலரில் அவதரித்தவர். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஐப்பசி சதயம் நட்சத்திரத்தையொட்டி இவருக்கு 10 நாள் திருவிழா நடக்கிறது. தலத்தில் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் நிற்கச்செய்து அருளினார் திருமால்.
இதன் அடிப்படையில் இவ்விழாவில் மூன்று ஆழ்வார்களும் ஒன்றாக காட்சி தரும், "வைபவ' நிகழ்ச்சியும், பத்தாம் நாளில் பிறந்த தலமான கிணற்றிற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருமழிசையாழ்வார், இத்தலத்தில் பேயாழ்வாரிடம் சீடராக இருந்து ஞான உபதேசம் பெற்றார். இந்த வைபவம், ஐப்பசி திருவிழாவின் 4ம் நாளில் நடக்கிறது. லட்சுமி, அமுதம் கடைந்த பாற்கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் இவளுக்கு, "அமிர்தவல்லி' எனப்பெயரிட்டு வளர்த்தார் பிருகு.
அவள் திருமண வயதை அடைந்தபோது, அவளை மணந்து கொள்ளும்படி திருமாலிடம் வேண்டினார். அவரும் இங்கு வந்து தாயாரை மணந்து கொண்டார். பிருகுவின் வேண்டுதலுக்காக சுவாமியும், தாயாரும் இங்கு எழுந்தருளினர். |