1. ஆண்-பெண் விகிதப்படி அனைத்திலும் இட ஒதுக்கீடு 2. சமநீதி அணைத்து துறைகளிலும் பதவி அதிகார பகிர்வு 3. இரண்டு வருட மகப்பேறு விடுப்பு 4. ஆண்-பெண் சமமான சம்பளம் 5.குடும்பத்தில் ஆண்களை வாரிசுகளாகவும், பெண்களை அடுத்தவர் வீட்டற்கு செல்பவராகவும் பார்க்கும் நிலையில் மாற்றம் 6. வரதட்சனை இல்லா திருமணம் 7. பெண்ணுக்கு மணக்கொடை கொடுத்தே திருமணம் செய்ய வேண்டும் 8. பெற்றோர்கள் மகளின் விருப்பப்படியே திருமணம் முடிக்க வேண்டும் 9. கணவன் அனைத்திற்கும் மனைவியிடம் ஒப்புதல் பெற வேண்டும் 10. விவாகரத்து செய்யும் உரிமை 11. மறுமணம் செய்யும் உரிமை 12. விதவை பொருளாதார உதவி 13. விவாகரத்துக்கு பின் பொருளாதார பகிர்வு பாதுகாப்பு 14. ஆண்பெண் சமமான கல்வி கற்கும் உரிமை 15. ஆண்பெண் சமமான சொத்துரிமை 16. பொருள் திரட்டும் சேமிக்கும் உரிமை 17. மணமகனை தேர்வு செய்யும் உரிமை 18. பாதுகாப்பு உரிமை 19. வழிபாட்டு உரிமை 20. தோற்றம் உரிமை (உடை, சிகை) 21. பேச்சுரிமை 22. பெண்களை (தோற்றத்தை) இழிவு படுத்தும் விளம்பரங்கள் திரைப்படங்களுக்கு தடை 23. தனி பெண்கள் பயிலகங்களுக்கு தடை. அனைத்திலும் ஆண் பெண் கலந்தே கற்க வேண்டும் 24. பெண்கள் வேலைக்கு செல்வதை யாரும் தடுக்கக் கூடாது 25. பெண்களுக்கு பணிபுரியும் இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் அமைக்கப்பட வேண்டும் 26. பணிபுரியும் இடங்களில் / பொது இடங்களில் சானிட்ரி நாப்கின் பெட்டி 27. தனித்து வாழத் துணிந்த பெண்களுக்கு, மாவட்டந்தோறும் தங்கும் விடுதி 28. திருமணத்தின் பெயரால் – கணவன் என்ற உரிமையால் நடக்கும் பாலியல் வன்முறைகளைக் கடும் குற்றம் 29. தனிக் குடித்தனம் உரிமை 30. பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மையம்
|