LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- கணித்தமிழ் -Tamil Computing

கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..

திரு மு.சிவலிங்கம் தனது வாழ்நாள் முழுவதும் தமிழ்ச்சமூகத்திற்கு பயனுள்ள எழுத்துக்களை ஆரவாரம் இல்லாமல் எழுதியவர். தினத்தந்தி முதல் தமிழ்கம்ப்யூட்டர் வரை பல இதழ்களில் தொடராக கணினி சார்ந்து எழுதியவர்.  தமிழ்க்கணினி வல்லுநர், தமிழில்  எண்ம கணினிதொடர்பாக ஆயிரம் பக்கத்திற்கு மேல் தனி நூலினை  இயற்றிய அறிஞர். அதனை அனைத்து கல்லூரிகளுக்கு இலவசமாக அனுப்பியவர். இவரது மறைவு கணித்தமிழ் துறைக்கு பேரிழப்பு.

திரு மு.சிவலிங்கம் அவர்கள் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், பன்னூலாசிரியருமான அறிஞர்.  மு. சிவலிங்கம் அவர்கள்(அகவை 73) 13.02.2024, இரவு 9.30 மணியளவில், சென்னை மாம்பலத்தில் உள்ள தம் இல்லத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார்

மு.சிவலிங்கம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிறந்த கவிஞர், சிவகாசி கல்லூரியிலும், மதுரை பல்கலைக்கழகத்திலும் கணிதம் பயின்றவர். எம்.எஸ்.சி பட்டம் பெற்றவர். இந்திய தொலைபேசித் துறையில் இளம் பொறியாளராக பணியை தொடங்கி பல உயர் பதவிகளை வகித்தவர். அதே துறையில் பொறியாளராக பணியாற்றி வந்தவரை மணம் புரிந்து சிறப்பான மண வாழ்க்கையை நடத்தியவர்.   தமிழ்க் கலைச் சொல்லாக்கத்தில் பெரும் பங்காற்றியவர்.  மார்க்சியச் சிந்தனை மையத்தின் நிறுவனர்.

தமிழில் மெய்நிகர் உள்ளிட்ட எண்ணற்றக் கலைச்சொற்களையும் உருவாக்கியவர். சி மொழியையும் ஜாவா மொழியையும் லட்சக்கணக்கானவர்களுக்கு நூல்களின் வழிக் கற்றுத்தந்தவர்.

தமிழ்க் கணிமைத் துறைக்கு இவரின் மறைவு பேரிழப்பாகும்.

 

மு.சிவலிங்கம்  எழுதிய நூல்கள்:

 

  • நெட்வொர்க் தொழில்நுட்பம்
  • IQ தேர்வுகள் எழுதுவது எப்படி?
  • டாஸ் கையேடு
  • மின்-அஞ்சல்
  • கம்ப்யூட்டர் இயக்க முறைகள் டாஸ், யூனிக்ஸ், விண்டோஸ் கையேடு
  • வருங்கால மொழி சி#
  • டி’பேஸ் வழியாக சி-மொழி
  • தகவல் தொழில்நுட்பம் - ஓர் அறிமுகம்
  • ரெட்ஹேட் லினக்ஸ், ஓப்பன் ஆஃபீஸ் கையேடு
  • +2 கணிப்பொறியியல் பாடப் புத்தகம் (தொகுதி-2)
  • +1 கணிப்பொறியியல் பாடப் புத்தகம் (தொகுதி-2)
  • கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் (ஏங்கெல்ஸ் எழுதிய நூலின் தமிழாக்கம்)
  • கூலியுழைப்பும் மூலதனமும் (மார்க்ஸ் எழுதிய நூலின் தமிழாக்கம்)
  • கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதிய நூலின் தமிழாக்கம்)
  • கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (ஃபிரெடரிக் ஏங்கெல்ஸ் எழுதிய நூலின் தமிழாக்கம்) 
  • லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் (ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய நூலின் தமிழாக்கம்)

 

மு.சிவலிங்கம், அவருடைய இணையதளம்: https://www.sivalingam.in/

 

 

அன்னாரின் கணித்தமிழ் பங்களிப்பை உள்வாங்கி இளைஞர்கள் தொடர்ந்து பயணிப்பது அவசியம்.

அன்னாரின் ஆன்மா இறையருளின் இளைப்பாற வேண்டுவோம்..

by Swathi   on 14 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் மொழி பேசும் மக்களை தமிழ் மொழி பேசும் மக்களை "தமிழர்" என்று அடையாளப்படுத்தும் சங்க இலக்கிய குறிப்புகள்!!
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை. தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை.
தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா? தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா?
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.