LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தத்துவ மேதை டி.கே.சீனிவாசன்

அறிஞர் அண்ணாவின் பேச்சால், எழுத்தால் ஈர்க்கப்பட்டு சிறந்த பேச்சாற்றலால் மேடையில் கனல் கக்கிய இளைஞர்களுள் டி.கே.சீனிவாசனும் ஒருவர். 
*****************************************     
யாரிந்த டி.கே.சீனிவாசன்.
***************************************
திருச்சியில், 1922-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் தண்டபாணி. தாயார் பெயர் ஆனந்தவல்லி. ஊர்ப்பெயரின் முதல் எழுத்தையும், தந்தை பெயரின் முதல் எழுத்தையும் இணைத்து தி.கோ.சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார். 
**************************************
1951-52-ஆம் ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. பாரத நாட்டில் விடுதலைக்காக அந்நியரை எதிர்த்துப்போராடும் இயக்கங்களின் லட்சியம்ஒன்றானாலும், பல்வேறு பாதைகளில் அவை இயங்கிக் கொண்டிருந்தன.
****************************************
அந்த சமயத்தில் டி.கே.சீனிவாசன் எழுதிய ஆடும் மாடும் புத்திலக்கியம் பிரபலமானது.  இவருடைய சிறுகதைகளின் முக்கிய கருவே விதவை மறுமணம். விதவைக்கு மறுவாழ்வு என்ற கொள்கையை அவர் பல கதைகளில் வற்புறுத்தியிருக்கிறார். பலத்த எதிர்ப்பு அந்தக் கதைகளுக்கு இருந்தது.   மிகத் துணிவுடன் கதையின் கருவை  மிக அழுத்தமாக வெளியிட்ட கொள்கை வீரர் அவர். "மஞ்சளோடு மங்களமும் மறைய வேண்டும்' என்று விதண்டாவாதம் பேசிய பழைமைவாதிகளுக்குப் பதில்  கூறுவதுபோல், "மலரும் பூவின் மணத்தைத் தடுக்க எந்த வேலியும் பயன்படாது' என்று எழுதினார். 
*********************************************
தொடக்கக் கல்வியைத் திருச்சி மற்றும் பசுமலையிலும் கற்ற அவர், ராமநாதபுரத்தில் பள்ளி இறுதிப் படிப்பைத் தொடர்ந்தார்.  அதை முடிக்கும் முன்பே 1941-இல் அவருக்கு ரயில்வே துறையில் வேலை கிடைத்தது. 17ஆண்டுகள்  ரயில்வே பணியில் தொடர்ந்தார். இளைஞராக இருந்தபோதே எழுத்துப் பணியில் ஈடுபாடும், அரசியலில் ஆர்வமும் ஏற்பட்டன. தன் வயதொத்த இளைஞர்களை ஒன்றுசேர்த்து படிப்பகம், வேண்டும் என்ற ஆர்வமும் எழுந்தது. ரயில்வே துறையில் எழுத்தாளராக இருந்த அவருக்கு அந்தப் பணி நிறைவைத் தரவில்லை. எழுத்தரைவிட எழுத்தாளராக இருப்பதே அவர் விருப்பம்.
********************************************
ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்தபோதே, நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று அவர் அந்த நாளிலேயே சீர்திருத்த மனப்பான்மையில் பேசியும் எழுதியும் வந்தார். வாழ்க்கை அவருக்குப் போராட்டமானதால் அரசியல் இயக்கமா, ரயில்வே பணியா என்ற மனப் போராட்டம் ஏற்பட்டபோது முழுநேர அரசியல் அவரை ஆட்கொண்டது. ஆனால், குடும்ப வாழ்க்கையையும் நடத்த வேண்டுமே! எனவே, ரயில்வே பணியைத் துறந்தார். எழுத்தை நம்பி, தன் பேச்சுத் திறமையை நம்பி சென்னைக்கு குடியேறினார்.
******************************************
1944-ல் சரசுவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவரது புத்தகங்களில் தத்துவமேதை டி.கே.சீனிவாசன் என்றே பெயர் அச்சிடப்பட்டிருக்கும்.
********************************* 
சீனிவாசன் எழுதிய மூன்று சிறுகதைத் தொகுதிகளில் முப்பது சிறு கதைகள் உள்ளன. அவை எல்லாம் கணவன் மனைவி உறவு, பெண்ணுரிமை சாதி வேற்றுமை குருட்டு நம்பிக்கைகளைக் கண்டித்தல் தாய் மொழிப்பற்று போன்றவற்றைக் கருப் பொருள்களாகக் கொண்டவை. இவரது 'உதிர்ந்த இதழ்கள்" என்னும் படைப்பிலக்கியம் 1961இல் சென்னை காவியக் கழகத்தால் வெளியிடப்பட்டது.
********************************
திருக்குறள் பற்றி வானொலியில் உரையாற்றினார். அவ்வுரையை 'வாழ்வு உணர்த்துகிறது' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை ஆக்கினார். இவர் எழுதிய "குறள் கொடுத்த குரல்" என்னும் நூல் சென்னை சாந்தி நிலையத்தால் வெளியிடப்பட்டது.
**********************************
கட்சிப் பணி
**************************
திராவிட இயக்கத்திற்கு முன்னோடியாக விளங்கிய நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டிருந்தார். 1960 முதல் தி.மு.க வின் பொதுக் குழு, செயற்குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். திருச்சியில் நிகழ்ந்த தி.மு.க இரண்டாம் மாநில மாநாட்டில் 'தத்துவ வரலாறு' என்னும் தலைப்பில் பேசினார். அது முதல் அவரை 'தத்துவ மேதை' என்று அழைக்கலாயினர்.
*********************************
1951-இல் "ஞாயிறு' என்ற இதழில் அவரது சிறுகதை "பதிவு செய்யப்படாதவள்' வெளிவந்தது. பிறகு, தஞ்சையிலிருந்து ஏ.கே.வேலன் நடத்தி வந்த"ஞாயிறு''என்ற இதழின் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றார். 
************************************
தி.மு.க நடத்திய போராட்டங்களில் அவர் பங்கு குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் உரிமைக்காகப்  பல போராட்டங்கள் நடத்தினார். திராவிட முன்னேற்றக் கழகம் அகவிலை உயர்வை எதிர்த்து நடத்திய போராட்டத்துக்கு தலைமை வகித்தார். மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் பெற்றார். 
*****************************
எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், அரசியல்வாதி எனப் பலத் தகுதிகளைக் கொண்டவர். திராவிட இயக்கப் படைப்பாளர் என்று அறியப் பட்டவர். திமுக தலைவர் அண்ணாதுரை மீது பற்றும் மதிப்பும் கொண்டவர். அவரைப் போலவே மேடையில் பேசுவார். தோற்றத்திலும் அண்ணாவைப் போல இருப்பார். எனவே 'சின்ன அண்ணா' என்றும் ‘தத்துவ மேதை தி.கோ.சீ’ என்றும் இவரை மக்கள் அழைத்தனர். 
**********************************
சிறுகதைத் தொகுப்புகள்
*******************************
 உலக அரங்கில், கொள்கையும் குழப்பமும், எல்லைக்கு அப்பால். 
*****************************
புதினங்கள் 
****************************
ஆடும் மாடும், ஊர்ந்தது உயர்ந்தால், மலர்ச்சியும் வளர்ச்சியும். 
*************************
கட்டுரை நூல்
****************
குறள் கொடுத்த குரல், வாழ்த்தும் வணக்கமும்
**********************************
இத்தனை சிறப்புகளால் மக்களால் அறியப்பட்ட டி.கே. சீனிவாசன், அக்டோபர் 9, 1989-ம் ஆண்டு தனது 66வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

அறிஞர் அண்ணாவின் பேச்சால், எழுத்தால் ஈர்க்கப்பட்டு சிறந்த பேச்சாற்றலால் மேடையில் கனல் கக்கிய இளைஞர்களுள் டி.கே.சீனிவாசனும் ஒருவர். 

யாரிந்த டி.கே.சீனிவாசன்.

திருச்சியில், 1922-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் தண்டபாணி. தாயார் பெயர் ஆனந்தவல்லி. ஊர்ப்பெயரின் முதல் எழுத்தையும், தந்தை பெயரின் முதல் எழுத்தையும் இணைத்து தி.கோ.சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார். 

1951-52-ஆம் ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. பாரத நாட்டில் விடுதலைக்காக அந்நியரை எதிர்த்துப்போராடும் இயக்கங்களின் லட்சியம்ஒன்றானாலும், பல்வேறு பாதைகளில் அவை இயங்கிக் கொண்டிருந்தன.

அந்த சமயத்தில் டி.கே.சீனிவாசன் எழுதிய ஆடும் மாடும் புத்திலக்கியம் பிரபலமானது.  இவருடைய சிறுகதைகளின் முக்கிய கருவே விதவை மறுமணம். விதவைக்கு மறுவாழ்வு என்ற கொள்கையை அவர் பல கதைகளில் வற்புறுத்தியிருக்கிறார். பலத்த எதிர்ப்பு அந்தக் கதைகளுக்கு இருந்தது.   மிகத் துணிவுடன் கதையின் கருவை  மிக அழுத்தமாக வெளியிட்ட கொள்கை வீரர் அவர். "மஞ்சளோடு மங்களமும் மறைய வேண்டும்' என்று விதண்டாவாதம் பேசிய பழைமைவாதிகளுக்குப் பதில்  கூறுவதுபோல், "மலரும் பூவின் மணத்தைத் தடுக்க எந்த வேலியும் பயன்படாது' என்று எழுதினார். 

எழுத்தரைவிட எழுத்தாளராக இருப்பதே அவர் விருப்பம்

தொடக்கக் கல்வியைத் திருச்சி மற்றும் பசுமலையிலும் கற்ற அவர், ராமநாதபுரத்தில் பள்ளி இறுதிப் படிப்பைத் தொடர்ந்தார்.  அதை முடிக்கும் முன்பே 1941-இல் அவருக்கு ரயில்வே துறையில் வேலை கிடைத்தது. 17ஆண்டுகள்  ரயில்வே பணியில் தொடர்ந்தார். இளைஞராக இருந்தபோதே எழுத்துப் பணியில் ஈடுபாடும், அரசியலில் ஆர்வமும் ஏற்பட்டன. தன் வயதொத்த இளைஞர்களை ஒன்றுசேர்த்து படிப்பகம், வேண்டும் என்ற ஆர்வமும் எழுந்தது. ரயில்வே துறையில் எழுத்தாளராக இருந்த அவருக்கு அந்தப் பணி நிறைவைத் தரவில்லை. எழுத்தரைவிட எழுத்தாளராக இருப்பதே அவர் விருப்பம்.

ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்தபோதே, நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று அவர் அந்த நாளிலேயே சீர்திருத்த மனப்பான்மையில் பேசியும் எழுதியும் வந்தார். வாழ்க்கை அவருக்குப் போராட்டமானதால் அரசியல் இயக்கமா, ரயில்வே பணியா என்ற மனப் போராட்டம் ஏற்பட்டபோது முழுநேர அரசியல் அவரை ஆட்கொண்டது. ஆனால், குடும்ப வாழ்க்கையையும் நடத்த வேண்டுமே! எனவே, ரயில்வே பணியைத் துறந்தார். எழுத்தை நம்பி, தன் பேச்சுத் திறமையை நம்பி சென்னைக்கு குடியேறினார்.

1944-ல் சரசுவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவரது புத்தகங்களில் தத்துவமேதை டி.கே.சீனிவாசன் என்றே பெயர் அச்சிடப்பட்டிருக்கும்.

சீனிவாசன் எழுதிய மூன்று சிறுகதைத் தொகுதிகளில் முப்பது சிறு கதைகள் உள்ளன. அவை எல்லாம் கணவன் மனைவி உறவு, பெண்ணுரிமை சாதி வேற்றுமை குருட்டு நம்பிக்கைகளைக் கண்டித்தல் தாய் மொழிப்பற்று போன்றவற்றைக் கருப் பொருள்களாகக் கொண்டவை. இவரது 'உதிர்ந்த இதழ்கள்" என்னும் படைப்பிலக்கியம் 1961இல் சென்னை காவியக் கழகத்தால் வெளியிடப்பட்டது.

திருக்குறள் பற்றி வானொலியில் உரையாற்றினார். அவ்வுரையை 'வாழ்வு உணர்த்துகிறது' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை ஆக்கினார். இவர் எழுதிய "குறள் கொடுத்த குரல்" என்னும் நூல் சென்னை சாந்தி நிலையத்தால் வெளியிடப்பட்டது.

கட்சிப் பணி

திராவிட இயக்கத்திற்கு முன்னோடியாக விளங்கிய நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டிருந்தார். 1960 முதல் தி.மு.க வின் பொதுக் குழு, செயற்குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். திருச்சியில் நிகழ்ந்த தி.மு.க இரண்டாம் மாநில மாநாட்டில் 'தத்துவ வரலாறு' என்னும் தலைப்பில் பேசினார். அது முதல் அவரை 'தத்துவ மேதை' என்று அழைக்கலாயினர்.

1951-இல் "ஞாயிறு' என்ற இதழில் அவரது சிறுகதை "பதிவு செய்யப்படாதவள்' வெளிவந்தது. பிறகு, தஞ்சையிலிருந்து ஏ.கே.வேலன் நடத்தி வந்த"ஞாயிறு''என்ற இதழின் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றார்.

தி.மு.க நடத்திய போராட்டங்களில் அவர் பங்கு குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் உரிமைக்காகப்  பல போராட்டங்கள் நடத்தினார். திராவிட முன்னேற்றக் கழகம் அகவிலை உயர்வை எதிர்த்து நடத்திய போராட்டத்துக்கு தலைமை வகித்தார். மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் பெற்றார்.

எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், அரசியல்வாதி எனப் பலத் தகுதிகளைக் கொண்டவர். திராவிட இயக்கப் படைப்பாளர் என்று அறியப் பட்டவர். திமுக தலைவர் அண்ணாதுரை மீது பற்றும் மதிப்பும் கொண்டவர். அவரைப் போலவே மேடையில் பேசுவார். தோற்றத்திலும் அண்ணாவைப் போல இருப்பார். எனவே 'சின்ன அண்ணா' என்றும் ‘தத்துவ மேதை தி.கோ.சீ’ என்றும் இவரை மக்கள் அழைத்தனர். 

சிறுகதைத் தொகுப்புகள்

உலக அரங்கில், கொள்கையும் குழப்பமும், எல்லைக்கு அப்பால்.

புதினங்கள் 

ஆடும் மாடும், ஊர்ந்தது உயர்ந்தால், மலர்ச்சியும் வளர்ச்சியும்.

கட்டுரை நூல்

குறள் கொடுத்த குரல், வாழ்த்தும் வணக்கமும்

இத்தனை சிறப்புகளால் மக்களால் அறியப்பட்ட டி.கே. சீனிவாசன், அக்டோபர் 9, 1989-ம் ஆண்டு தனது 66வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

by Kumar   on 11 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.