ஜெயம் ரவி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக முன்னேறி வருகிறார். தனி ஒருவன் படத்தின் மெகா ஹிட் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இவ்விருவரின் கூட்டணியில் தற்போது, போகன் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இந்த படம் குறித்து நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் போகன் படத்தின் கதை குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, இந்த படம் ஒரு கூடு விட்டு கூடு பாயும் சமாச்சாரம் கொண்ட படமாம்.
இந்த கதை ஏற்கனவே சின்ன வாத்தியார் படத்தில் பார்த்த கதை என்றாலும், இந்த படத்தில் கொஞ்சம் வித்தியசமகாக காட்டியிருக்கிறார்களாம். படத்தின் முதல் பாதியில், ஜெயம் ரவி உடம்பில் அரவிந்த் சாமியும், மறு பாதியில் அரவிந்த் சாமி உடம்பில் ஜெயம் ரவியும் புகுந்து கொண்டு செய்யும் சேட்டை தான் படத்தின் முழு கதையாம். கதை பழசு என்றாலும் கண்டிப்பாக திரையரங்குகளை ஒரு கலக்கு கலக்கும் என சொல்கிறது படக்குழு.
|