|
||||||||
காமாட்டா |
||||||||
காமாட்டா என்ற இக்கலை கரகாட்டத்தின் துணை ஆட்டம் ஆகும். இது இடை நிகழ்ச்சி ஆட்டமாகவே பெரும்பாலும் நிகழ்கிறது. இவ்வாட்டமானது தேவகோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளிலேயே பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது. கரகாட்டப் பெண்களும், கோமாளியும் இதில் கலந்து கொள்கின்றனர். ஆடுகளத்தில் கரும்பு ஒன்று நடப்படும். அதைச் சுற்றி எரியும் பொருட்களைப் போட்டுத் தீ வைப்பர். இந்தத் தீயைச் சுற்றிக் கலைஞர்கள் மாரடிப்புப் பாடலைப் பாடி மார்பில் அடித்துக்கொண்டு ஆடுவர். இது இலாவணியின் தாக்கம் கொண்டது. |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
Tags: காமாட்டா காமா Kama Kamatta | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|