|
||||||||
வெள்ளை முடி வருவதை தவிர்க்க சில வழிகள் !! |
||||||||
இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுள் முதன்மையானது இளைமையிலேயே முடி நரைத்திருப்பது தான்.இப்படி இளம் வயதில் வெள்ளை முடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. பொதுவாக வெள்ளை முடி வருவதற்கு மருத்துவரீதியாக காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து வெள்ளை முடியை ஏற்படுத்திவிடுகிறது. முடி நரைப்பதற்கான காரணங்களை சரியாக தெரிந்து கொண்டால், இளமையிலேயே முடி நரைப்பதை தடுக்கலாம். இப்போது அந்த நரை முடி வருவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போமா!!! இன்றைய அவசர உலகில், நிறைய டென்சன், மனஅழுத்தம் போன்றவற்றால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தான் விரைவிலேயே நரை முடி வருகிறது. உங்களுக்கு தெரியுமா? வயதானவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், டென்சனுடன் இருப்பதால் தான், அவர்களுக்கு நரை முடி ஏற்படுகிறது. ஆகவே அத்தகைய டென்சனை சிறுவயதிலேயே வந்தால், நரை முடியும் வந்துவிடும். எனவே எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். தற்போதைய ஆய்வு ஒன்றில் தலையில் அதிகமான அளவில் பொடுகு இருந்தால், விரைவில் நரை முடி வந்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே எப்போதும் தலையை சுத்தமாக, பொடுகில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் தலையில் உள்ள பொடுகு நீக்குவதற்கு ஹென்னாவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து தடவி குளித்து வந்தால், பொடுகு எளிதில் நீங்கிவிடும். நரை முடி உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டாலும் வரும். அதிலும் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் ஸ்லிம்முடன் இருக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நரை முடியானது தலையை ஆக்ரமிக்கிறது. இந்திய மக்களின் கருமையான கூந்தலுக்கான இரகசியம் கறிவேப்பிலை. இத்தகைய கறிவேப்பிலையை சமையலில் சேர்த்தும் சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான எண்ணெயில் ஊற வைத்து, கூந்தலுக்கு தடவி வரலாம். கூந்தல் வெள்ளையாவதற்கு உடலில் காப்பர் சத்து குறைவாக இருப்பது முக்கிய காரணம் என்று தற்போதைய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் காப்பர் தான், உடலில் உள்ள நிறமூட்டும் மெலனின் என்னும் நிறமியை அதிகம் உற்பத்தி செய்கிறது. ஆகவே இத்தகைய சத்து குறைபாட்டினால், கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் அளவு குறைந்து, வெள்ளை முடி ஏற்படுகிறது. மேலும் இந்த காப்பர் சத்து கடல் உணவுகளில் அதிகம் உள்ளது. அதிலும் நண்டில் அதிகம் உள்ளது. சைவ உணவு என்றால் எலுமிச்சை மற்றும் காளானில் இந்த சத்து உள்ளது. தைராய்டு இருந்தாலும் வெள்ளை முடி வர ஆரம்பிக்கும். அதிலும் தற்போது நிறைய இளம் வயதினர் தைராய்டு பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் தான். ஆகவே இவற்றில் சரியாக இருந்தால், தைராய்டு பிரச்சனையுடன், வெள்ளை முடி பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம். |
||||||||
by Swathi on 03 Jun 2014 22 Comments | ||||||||
Tags: Avoid White Hair Vellai Mudi வெள்ளை முடி | ||||||||
Disclaimer: |
||||||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|