தேவையானவை
1. தினை அரிசி - 200 கிராம்
2. வெல்லம் - 300 கிராம்
3. பாசி பருப்பு - 1/2 கரண்டி
4. நெய் - 100 கிராம்
5. தேங்காய் - 1/2 துருவியது
6. ஏலக்காய் - 4 (அ) 5
7. முந்திரி திராட்சை - 25 கிராம்
8. உப்பு - தேவைகேற்ப
செய்முறை :
1. தினை அரிசியையும், பாசி பருப்பையும் மூன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
2. நன்றாக குழைந்து வெந்தவுடன் வெல்லம், சிட்டிகை உப்பு சேர்க்கவும். வெல்ல வாசனை மறையும் வரை நன்றாக கிளறவும்.
3. பின்பு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதனுடன் தேங்காய், ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
|