|
||||||||
இந்திய கப்பல் படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் !! |
||||||||
இந்திய கப்பல் படையில் பணிபுரிய தகுதியும், விருப்பமும் உள்ள திருமணம் ஆகாத ஆண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிப்பிரிவு : Naval Armament Inspections Cadre of Executive Branch வயது வரம்பு: 19 1/2 - 25க்குள் இருக்க வேண்டும்.(அதாவது 02.07.1990 - 01.01.1996க்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்) கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும். பணிப்பிரிவு : Education Branch. வயது வரம்பு: 21 - 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1990 - 01.07.1994க்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி : கணிதத்துறையில் இளங்கலை பட்டமும் இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றிக்க வேண்டும். அல்லது இயற்பியலில் இளங்கலையும் கணிதத்தில் முதுகலையும் முடித்திருக்க வேண்டும். அல்லது எம்.ஏ ஆங்கிலம் அல்லது எம்.எஸ்சி வேதியியல் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக், எம்.டெக் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். பிறகு அதனை 2 பிரிண்ட் அவுட் எடுத்து அதில் ஒன்றை தேவையான சான்றிதழ்கள் நகல்களுடன் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Post Box No.04, RK Puram Main PO, New Delhi - 110066. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2014 ஆன்லைன் விண்ணப்ப நகல் சென்று சேர கடைசி தேதி: 04.11.2014 ஆன்-லைனில் விண்ணப்பிக்க மற்றும் முழுமையான விவரங்கள் அறிய www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். |
||||||||
by Swathi on 04 Oct 2014 0 Comments | ||||||||
Tags: Navy Recruitments BE Recruitment Indian Navy Recruitment B.Tech Recruitment இந்திய கப்பல் படை இந்திய கப்பல் படை வேலைவாய்ப்பு பொறியியல் பட்டதாரி வேலைவாய்ப்பு | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|