|
||||||||
தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... |
||||||||
கொல்கத்தாவில் உள்ள தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : Assistant(உதவியாளர்) காலியிடங்கள் : 10 (UR - 07, OBC - 02, SC - 01) சம்பள விகிதம் : 9,300 - 34,800 வயது வரம்பு : 24.12.2016 தேதிப்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி : Arts/Science/Commerce பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு சலுகை : OBC பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் : ரூ.100 இதனை "Natonal Council of Science Museums" என்ற பெயரில் கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் டி.டியாக எடுக்க வேண்டும். பெண்கள்/SC/ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் http://www.ncsm.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அத்துடன் டி.டி மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி : Visvesvaraya Industrial & Technological Museum, Kasturba Road, Bangalore - 560 001 விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 24.12.2016 |
||||||||
by Swathi on 26 Nov 2016 0 Comments | ||||||||
Tags: NCSM Latest Jobs NCSM Assistant Recruitment உதவியாளர் பணியிடங்கள் | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|