|
||||||||
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் !! |
||||||||
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : உதவியாளர் (Assistant) மொத்த காலிப்பணியிடங்கள் : 610 சம்பளம் : 13,150 - 34,990 வயது வரம்பு : 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும், (08.11.2016 தேதிப்படி) வயது வரம்பு சலுகை : OBC பிரிவினர்களுக்கு - 3 வருடங்கள் SC/ST பிரிவினர்களுக்கு - 5 வருடங்கள் பெண்கள், விதவைகள், PWD பிரிவினர்களுக்கு - 10 வருடங்கள் கல்வித் தகுதி : இளநிலை பட்டம் பெற்று கணினியில் Word Processing-ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பொது மற்றும் OBC பிரிவினர்கள் 50 % மதிப்பெண்களும், SC/ST/PWD பிரிவினர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பை முடிக்காத முன்னாள் ராணுவத்தினர்கள் கூட விண்ணப்பிக்கலாம். (குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், 15 வருடங்கள் ராணுவத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்) தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC பிரிவினர்களுக்கு - ரூ.450 SC/ST/PWD/Ex-SM பிரிவினர்களுக்கு - ரூ.50 விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.11.2016 SC/ST/OBC/PWD பிரிவினர்களுக்கு இந்த தேர்விற்கான இலவசப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் சேரவிரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Pre-Examinaton Training விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சன்றிதல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். Reserve Bank of India, Fort Glacis, 16, Rajaji Salai, Chennai - 600001.
கூடுதல் விவரங்கள் அறிய : https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3268 காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளது. |
||||||||
by Swathi on 12 Nov 2016 0 Comments | ||||||||
Tags: Bank Jobs RBI Jobs Bank Assistant Jobs வங்கி வேலைவாய்ப்பு ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு உதவியாளர் காலிப்பணியிடங்கள் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|