ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தில் காலியாக உள்ள கிளரிக்கல் காலியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 50 சதவிகிதமதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். (பகுதி நேர படிப்பு / தொலைதூர படிப்பு ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)
வயது: 01.12.2014 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
சிறப்புத் தகுதிகள்: ஹோம் பைனான்ஸ், ஆபரேஷன்ஸ், கிரெடிட், சேல்ஸ் பிரிவுகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
பணிபுரிய இருக்கும் மாநில ஆட்சி மொழியில் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்தி மொழி தெரிந்திருந்தால் கூடுதல் முன்னுரிமை உண்டு.
இரு சக்கர வாகனம் வைத்திருப்பதுடன் ஓட்டுனர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.
திண்டுக்கல், ஓசூர், திருப்பூர், கரூர், நாமக்கல் ஆகிய இடங்களில் தமிழகத்திலும், ஆந்திராவில் நெல்லுார், தெலுங்கானாவில் கம்மம் மற்றும் வாராங்கல், கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர், குஜராத்தில் வதோதரா, ஆமதாபாத், ஆனந்த், மெஹ்சானா, பாவ் நகர், மகாராஷ்டிராவில் டோம்பிவிலி, நாக்பூர், நாசிக், புனே, சங்க்லி, அவுரங்காபாத், அமராவதி, அஹமத் நகர், நந்தெத் ஆகிய இடங்களில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட தகுதிகள் உடைய விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட பயோ-டேட்டா படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
The General Manager (HR),
Repco Home Finance Limited,
3rd Floor, Alexander Square,New No. 2/Old No. 34 & 34, Sardar Patel Road,
Guindy,Chennai- 600 032.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.12.2014
கூடுதல் தகவலுக்கு http://www.repcohome.com/Clerical_Dec_14_All.pdf என்ற இணைய முகவரியை பார்க்கவும்.
|