|
||||||||
உழைப்பு - க.கோவிந்தன் |
||||||||
ஆர்வமுடன் ஓயா உழைப்பும் சேர்ந்திடின்
தேர்வெதிலும் தோல்வி இல்
ஊதியம் பெறாது உழைப்பு அளித்தல்
ஈதலுக்கு இணையா கும்.
உழைத்துப் பிழைக்க விழைவர் என்றும்
பிழைத்தும் பிறர்பொருள் விழையார்.
உடலுழைப்பு தாழ்வு என்னும் எண்ணம்
விடல்வேண்டும் வாழ்வில் உயர.
கல்விஉடல் உழைப்பைஇழுக் காஎண்ண காரணமெனின்
கல்லாமை கோடி நலம்.
உழைப்பிற்கு தயங்குவான் எங்கும் என்றும்
அழைப்பின்றி யும்விருந்தா வான்.
இரந்து வாழ்தல் தாழ்வாகும் தெரிந்ததொழில்
புரிந்து வாழ்தல் வாழ்வாம்
விருந்தென்று பணிபுரியா துவிலகி நிற்றல்
துறந்தார்க்கும் பொருந்தா செயல்
உழைக்க உடல்நலம் குறையாதென் பதால் உடல்
உழைப்பு நல்கார்மிகக் கொடியர்.
தன்னால் எளிதிலியலும் செயலைபிறர்க் குகூறல்
இன்னா செயலுக்கு நேர்.
வியர்வுசிந்தி உழைத்து வாழ்வில் காணும்
உயர்வேவிழு மியர்விழை வாம்.
ஓய்வல்ல உழைக்காது "இளைப்பாறுவார்" பெறுதல்
நோயாகும் உடற்கும்குடிக் கும்அது.
ஊதியம்குறை வு உயர்வுஇல் லென உழைப்பு குறைப்பின்
தீதடைவர் நிலையாய்திற மிழந்து.
அவரவர் தொழிலவரிடம் பெறாதுதானே செய்தல்
தவறும்பணி உயர்வுக்குதீ துமாகும்.
உழைப்பிற்கு தயங்குவான் சுகத்திற்கு ஏங்குவான்
பழைமை தவிர்த்தல் நன்று.
வாழ்விற்கு எல்லா தொழிலும்தே வைஎன்பதால்
தாழ்ந்ததொழில் என ஒன் றில்லை
செய்யும் தொழிலுக்கு சிறப்பு பெற்றிடுவர்
செம்மையாய் அதைசெய் திடின்
உடற்திடமும் நலமும்நிலை யிலைஎன்பதால் பிறர்க்குகாலம்
கடத்தாது உழைத்திடல் நன்றாம்
உடற்பயிற்சியால் உடல்நலம் பெரும்உடல் உழைப்போ
உடல்நலமும் நாட்டுவளமும் தரும்.
உழைக்காது பிறர்உதவி நாடுவார்க்கு உதவல்
பிழையன்றி நல்வினை ஆகா
பொருள்உதவி பிரிந்தார்க்கு உடல்உழைப் பேனும்
தருதலேகுடி பிறந்தார் இயல்பாம்
உழைப்பின்றி உயர்வில்லை என்பதால்சிறு வயதுமுதலே
உழைப்பில்ஆர் வமூட்டல் தேவை
ஆர்வமுடன் ஓயா உழைப்பும் சேர்ந்திடின் தேர்வெதிலும் தோல்வி இல் ஊதியம் பெறாது உழைப்பு அளித்தல் ஈதலுக்கு இணையா கும். உழைத்துப் பிழைக்க விழைவர் என்றும் பிழைத்தும் பிறர்பொருள் விழையார். உடலுழைப்பு தாழ்வு என்னும் எண்ணம் விடல்வேண்டும் வாழ்வில் உயர. கல்விஉடல் உழைப்பைஇழுக் காஎண்ண காரணமெனின் கல்லாமை கோடி நலம். உழைப்பிற்கு தயங்குவான் எங்கும் என்றும் அழைப்பின்றி யும்விருந்தா வான். இரந்து வாழ்தல் தாழ்வாகும் தெரிந்ததொழில் புரிந்து வாழ்தல் வாழ்வாம் விருந்தென்று பணிபுரியா துவிலகி நிற்றல் துறந்தார்க்கும் பொருந்தா செயல் உழைக்க உடல்நலம் குறையாதென் பதால் உடல் உழைப்பு நல்கார்மிகக் கொடியர். தன்னால் எளிதிலியலும் செயலைபிறர்க் குகூறல் இன்னா செயலுக்கு நேர். வியர்வுசிந்தி உழைத்து வாழ்வில் காணும் உயர்வேவிழு மியர்விழை வாம். ஓய்வல்ல உழைக்காது "இளைப்பாறுவார்" பெறுதல் நோயாகும் உடற்கும்குடிக் கும்அது. ஊதியம்குறை வு உயர்வுஇல் லென உழைப்பு குறைப்பின் தீதடைவர் நிலையாய்திற மிழந்து. அவரவர் தொழிலவரிடம் பெறாதுதானே செய்தல் தவறும்பணி உயர்வுக்குதீ துமாகும். உழைப்பிற்கு தயங்குவான் சுகத்திற்கு ஏங்குவான் பழைமை தவிர்த்தல் நன்று. வாழ்விற்கு எல்லா தொழிலும்தே வைஎன்பதால் தாழ்ந்ததொழில் என ஒன் றில்லை செய்யும் தொழிலுக்கு சிறப்பு பெற்றிடுவர் செம்மையாய் அதைசெய் திடின் உடற்திடமும் நலமும்நிலை யிலைஎன்பதால் பிறர்க்குகாலம் கடத்தாது உழைத்திடல் நன்றாம் உடற்பயிற்சியால் உடல்நலம் பெரும்உடல் உழைப்போ உடல்நலமும் நாட்டுவளமும் தரும். உழைக்காது பிறர்உதவி நாடுவார்க்கு உதவல் பிழையன்றி நல்வினை ஆகா பொருள்உதவி பிரிந்தார்க்கு உடல்உழைப் பேனும் தருதலேகுடி பிறந்தார் இயல்பாம் உழைப்பின்றி உயர்வில்லை என்பதால்சிறு வயதுமுதலே உழைப்பில்ஆர் வமூட்டல் தேவை
- க.கோவிந்தன் |
||||||||
by Swathi on 15 Mar 2016 1 Comments | ||||||||
Tags: Ulaippu உழைப்பு | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|