|
||||||
குறட்டையை விரட்டும் உணவு வகைகள் !! |
||||||
குறட்டை என்பது ஒரு நோய். தூங்கும் போது மூச்சுப் பாதை சிறிதளவோ அல்லது முழுவதுமாகவோ அடைத்துக் கொள்வதால்தான் குறட்டை தோன்றுகிறது. உடல் எடை அதிகரித்தால், அதிக கொழுப்பு சேரும். அப்போது நுரையீரலால் தேவையான அளவுக்கு விரிவடைய இயலாது. அதனால் மூச்சை உள்ளே இழுப்பதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டு குறட்டை என்னும் முரட்டுச் சத்தமாக வெளியேறும். குறட்டையால் அருகில் தூங்குபவர்களுக்கு மட்டும்தான் தொந்தரவு என்பதில்லை. குறட்டைவிடுபவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும். குறட்டையை கட்டுப்படுத்தாவிட்டால் இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல நோய்கள் ஏற்படக்கூடும். குறட்டையை விரட்டும் சில உணவுகள் பற்றி இங்கு காண்போம்..
தேன் :
குறட்டையை நிறுத்துவதற்கு தேன் ஒரு சிறந்த உணவாகும். எரிச்சல்களையும் மற்றும் நுண்ணுயிரிகளையும் வர விடாமல் தேன் தடுக்கின்றது. இதனால் மூச்சு குழாயில் உள்ள அடைப்புகள் சரியாகி தொண்டையில் உள்ள அடைப்புகள் சரி செய்யப்படுகின்றன.
மாமிச உணவுகளை தவிருங்கள் :
குறட்டையை விளைவிக்கும் பொருளாக மாமிச இறைச்சி வகைகள் உள்ளன. இத்தகைய சிவப்பு இறைச்சிகளை(மாட்டு கறி) தவிர்த்து மீனை உணவில் சேர்த்துக் கொண்டால் குறட்டையை கட்டுப்படுத்த முடியும். இத்தகைய இறைச்சியில் உள்ள கொழுப்பு வகைகள் நமது இரத்த குழாய்களை அடைந்து தசை சுருக்கங்களை உருவாக்குகிறது. இதனால் தொண்டை வீக்கமடைகின்றது.
ஆலிவ் எண்ணெய்
சாச்சுரேட்டட் எண்ணெயை சாப்பிடுவதன் மூலம் அமிலம் பின்னோக்கி பாய்கின்றன. உணவுக் குழாயில் உள்ள வீக்கத்தினால் உருவாகும் அமிலம் குறட்டையை உண்டாக்குகிறது. ஆலிவ் எண்ணெய் தொண்டை பகுதியில் உள்ள இத்தகைய அடைப்புகளையும் வீக்கங்களையும் குறைத்து குறட்டையை வர விடாமல் தடுக்கின்றது.
தேனீர் :
தொண்டையில் உள்ள அடைப்புகளையும், நெருடல்களையும் நீக்கும் சிறந்த பானமாக டீ உள்ளது. அதனால் குறட்டையும் வராமல் தவிர்க்கப்படுகிறது. கெமோமில் தேயிலை, மின்ட் தேயிலை, பச்சை தேயிலை, மற்றும் டீ டிக்காசன் ஆகியவை இந்த விஷயத்தில் சிறந்த பலனை தருகின்றன. இதனுடன் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து அருந்தினால் குறட்டையை அறவே நிறுத்த முடியும்.
பால் பொருட்களை தவிர்க்கவும் :
பாலும், பால் சேர்க்கப்பட்ட எந்த உணவுகளும் குறட்டையை வரவழைக்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன. நீங்கள் குறட்டையை நிறுத்த விரும்பினால் நிச்சயம் இத்தகைய உணவுகளை தவிர்ப்பது சிறந்த முடிவாக இருக்கும். ஒரு வேளை நீங்கள் இதை அவற்றை சாப்பிட நேர்ந்தால், அவ்வாறு செய்த மூன்று அல்லது நான்கு மணி நேரம் கழித்து உறங்கினால் சிறந்தது.
மதுவை தவிர்க்கவும் :
உங்களுக்கு குடிக்கும் பழக்கம் இருந்தால் நிச்சயம் எந்த ஒரு மருந்தும் குறட்டையை குறைக்க உதவாது. மது உங்களது நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இதனால் தொண்டையின் தசைகள் தளர்வடைகின்றன. நாம் குறட்டையை குறைக்கும் முயற்சியில் தேவையான உணவை உண்ணும் போது நல்ல பழக்க வழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.
அதிகம் சாப்பிட வேண்டாம் :
நல்ல உணவை உண்ட பின் உடனடியாக தூங்குவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்னர், சில மணி நேரம் கழித்து உறங்குவது நல்லது. இந்த இடைப்பட்ட நேரத்தில் சொஞ்சம் நடந்தால் சீக்கிரம் உண்ட உணவு எளிதில் செறிக்கும். ஆனால் இரவு நேரத்தில் அதிகம் சாப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டும். |
||||||
by Swathi on 17 Jan 2014 36 Comments | ||||||
Tags: குறட்டையை விரட்ட குறட்டையை குணப்படுத்த குறட்டை Kurattai Kurattai Niruththa Stop Kurattai Snoring Tamil | ||||||
Disclaimer: |
||||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|