கடந்த மாதம் வரை ஐ, என்னை அறிந்தால், ஆம்பள, காக்கிசட்டை, கொம்பன் ஆகிய ஐந்து திரைப்படங்கள் பொங்கல் ரிலீசாக வெளியாவதாக இருந்தது. இதில் ஐ மற்றும் என்னை அறிந்தால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால், அந்த படத்தை வெளியிடவும் ஏராளமான திரையரங்குகள் தயாராக இருந்தன.
மேலும் இவ்விரு படங்களும் பொங்கலுக்கு வெளியாகுமேயானால் மற்றப் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காது என்பதால் ‘காக்கி சட்டை’ மற்றும் ‘கொம்பன்’ ஆகிய படங்கள் பொங்கல் ரிலீசில் இருந்து பின் வாங்கின.
இதனிடையே பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் ரிலீஸ் திடீரென ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் ‘ஐ’, ‘ஆம்பள’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே பொங்கலுக்கு வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது பொங்கல் ரிலீசில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படம் புதிதாக இணைந்துள்ளது. பொங்கலை முன்னிட்டு வரும் 15ம் தேதி இப்படம் ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டார்லிங் படத்தை சாம் ஆன்டன் இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
|