உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றிமையாதது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவு வகைககளில் உள்ளன. அதிலும் அசைவ பிரியர்களுக்கு இறைச்சி, முட்டை, போன்றவை உள்ளது. ஆனால் சைவத்தை சாப்பிடுபவர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். மேலும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மட்டுமின்றி வேறு சில ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.
குறிப்பாக பருப்பு வகைகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
பச்சை பயற்றில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இரும்புச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள். தினசரி உணவில் பச்சை பயிரை சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகையிலிருந்து தப்பிக்கலாம்.
பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். தினமும் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.
உடல் எடையை சீராக பராமரிக்க விரும்புபவர்களுக்கு, பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.
உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு கப் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |